மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். மகன் கேரக்டரில் சர்வானந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லீலா நடிக்க உள்ளார். தெலுங்கு ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷா அனைத்து டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். இப்போது அவர் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார். அதாவது 39 வயதான சர்வானந்துக்கு அம்மாவாக 40 வயதாகும் திரிஷா நடிக்க உள்ளார். கடந்த 2015ம் ஆண்டு திரிஷா நடிப்பில் நாயகி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. அதன் பிறகு இவர் எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் நடிக்க உள்ள திரிஷா, தன்னைவிட ஒரு வயதே குறைந்த நடிகருக்கு அம்மாவாக நடிப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய ெசய்துள்ளது. இதை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
The post 39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
