ஜெயிலர் படத்தின் 3வது பாடல் வெளியானது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் 3வது பாடல் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் டி.வி. நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.

‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் 4வது முறையாக ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதனால், இப்படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவான ‘வா நூ காவாலய்யா’ என்று தொடங்கும் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடல், கடந்த 6ம் தேதி வெளியானது. ரஜினிகாந்த், தமன்னா இணைந்து நடித்த இப்பாடல் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில், 2வது பாடலான ‘ஹுக்கும்… டைகர் கா ஹுக்கும்’ என்ற பாடல், கடந்த 17ம் தேதி வெளியானது. இந்த பாடலும் இணையதளத்தில் டிரெண்டானது.

இரு பாடல்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ‘ஹுக்கும்’ பாடலுக்கு முன்பாக அந்த பாடலுக்கான முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டது. அதில் ரஜினிகாந்த் பேசும் வசனம் வைரலானது. ‘ஹேய், இங்க நான் தான் கிங். இங்க நான் வச்சது தான் ரூல்ஸ். அந்த ரூல்ஸை நான் அப்பப்போ என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன். அதை கப் சிப்புனு கேட்டு ஃபாலோ பண்ணனும். அத விட்டுட்டு ஏதாவது அடாவடித்தனம் பண்ண நினைச்ச…. உன்ன கண்டம் துண்டமா வெட்டி கலைச்சி போட்டுடுவேன். ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்’ என மாஸாக பேசி துப்பாக்கியை வைத்து ரஜினிகாந்த் மிரட்டும் காட்சிகள் அந்த புரோமோவில் இடம்பெற்றது.

இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 28ம் தேதி மாலை நடைபெறுகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கனவே வெளிவந்த ‘காவாலா’ மற்றும் ‘ஹுக்கும்’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிரெண்டிங் ஹிட்டடித்த நிலையில், ரஜினியின் பாப்புலரான பஞ்ச் வசனங்களில் ஒன்றான ‘ஜூஜூபி’ என்ற வரியில் தொடங்கும் மூன்றாவது பாடல் நேற்று மாலை இணையதளத்தில் வெளியானது. இப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

The post ஜெயிலர் படத்தின் 3வது பாடல் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: