போலா சங்கர் படத்தின் டப்பிங்கை முடித்தார் சிரஞ்சீவி

ஐதராபாத்: ‘போலா சங்கர்’ படத்தின் டப்பிங்கை சிரஞ்சீவி பேசி முடித்திருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வேதாளம்’. இந்த படம் தற்போது தெலுங்கில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக்காகி வருகிறது. மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏகே எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு போலா சங்கர் என தலைப்பு வைத்துள்ளனர். அண்ணன் – தங்கை சென்டிமென்ட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கை சிரஞ்சீவி நிறைவு செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

The post போலா சங்கர் படத்தின் டப்பிங்கை முடித்தார் சிரஞ்சீவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: