லியோவில் இணைந்தார் அனுராக் காஷ்யப்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. இதில் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மடோனா செபஸ்டியன் உள்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. வரும் அக்டோபரில் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் அளித்த பேட்டி ஒன்றில், ‘லோகேஷின் எல்சியூவில் நான் சாக விரும்புகிறேன்’ என்று அனுராக் காஷ்யப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் வில்லனாக நடித்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.

The post லியோவில் இணைந்தார் அனுராக் காஷ்யப் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: