‘ஜெயிலர்’ படத்தின் பாடல் முன்னோட்டம் வெளியானது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் சிங்கிள் பாடலுக்கான புரோமோ நேற்று மாலை வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், சுனில் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.

‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் 4வது முறையாக ‘ஜெயிலர்’படத்தில் இணைந்துள்ள னர். இதனால் படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு படத்தின் முன்னோட்டம் வெளியாகி வைரலானது. இது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ நேற்று மாலை 7 மணிக்கு வெளியானது. அனிருத் இசையில் ‘வா நூ காவாலய்யா’ என்று தொடங்கும் இப்படத்தின் முதல் பாடல், வரும் 6ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இப்பாடலுக்கு தமன்னா ஆடி நடிப்பது போல் இடம்பெறுகிறது.

The post ‘ஜெயிலர்’ படத்தின் பாடல் முன்னோட்டம் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: