ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்ஹாசன்

 

சென்னை: கடந்த 1996ல் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்’ படத்தில் நடித்த கமல்ஹாசன், தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னை விமான நிலையத்தில் நடந்தது. இந்நிலையில், ‘இந்தியன்’ படத்தின் 3ம் பாகத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை ெதாடங்கியுள்ளது. காரணம், ‘இந்தியன் 2’ படத்துக்காக ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், இதைதொடர்ந்து 3ம் பாகத்தை முழுமையாக உருவாக்கி வெளியிடுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் முக்கிய காட்சிகளை சமீபத்தில் பார்த்த கமல்ஹாசன், தனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதாக சொல்லி, ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்தார். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாம் இணைந்து பணியாற்றிய ‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளைப் பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருந்துவிக்கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலைவாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள், பல புதிய உயரங்கள் தேடி’ என்று பாராட்டியுள்ளார்.

The post ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்ஹாசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: