நடிகர் பிருத்விராஜ் இயக்கும் ‘டைசன்’ படம் மூலம் அனிருத் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல்

நடிகர் பிருத்விராஜ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இவர் தமிழில் மொழி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடுஜீவிதம்’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘சலார்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ‘சலார்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிருத்விராஜ், ‘கேஜிஎப்’ பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் ‘டைசன்’ படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் இசையமைக்க ராக்ஸ்டார் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பது உறுதியாகும்பட்சத்தில் மலையாள சினிமாவில் முதன் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். ஏற்கனவே மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ படத்தில் ‘பாட்டொன்னு பாடப்போறேன்டா’ என்ற பாடலை பாடியிருந்தார்.

அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் ‘மோஸ்ட் வான்டட்’ இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் இணையதளத்தில் பெரியளவில் ஹிட் அடிக்கிறது.

தமிழ் சினிமாவில், ரஜினியின் ‘ஜெயிலர்’, விஜய்யின் ‘லியோ’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, , இந்தியில் ஷாருக்கானின் ‘ஜவான்’, தெலுங்கில் ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ஆகிய முன்னணி படங்களில் அனிருத் இசையமைத்து மாஸ் காட்டி வருகிறார்.

The post நடிகர் பிருத்விராஜ் இயக்கும் ‘டைசன்’ படம் மூலம் அனிருத் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: