திருச்சி,ஏப்.4: மின் நுகர்வோர் சிறப்பு மனுநீதி முகாம் நாளை (ஏப்.5) ம் தேதி மன்னார்புரம் வளாகத்தில் நடைபெற உள்ளது. திருச்சி மின்பகிர்மான வட்டம் கிழக்கு கோட்டத்தை சார்ந்த பகுதிகளில் மின் நுகர்வோர் மற்றும் பொது மக்களிடமிருந்து மின் கட்டண தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்யும் வகையில் நாளை (ஏப்.5) ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மன்னார்புரம் வளாகத்தில் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் கலந்து கொண்டு பெறப்படும் அனைத்து மின் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும். மேலும், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
The post மன்னார்புரத்தில் நாளை மின் நுகர்வோர் சிறப்பு மனுநீதி முகாம் appeared first on Dinakaran.