கோர்ட்டுகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை

திருச்சி, ஏப்.10: திருச்சி மாவட்ட கோர்ட் உட்பட தாலுகா பகுதிகளிலுள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் இன்று (ஏப்.10) முதல் வரும் ஏப்.15ம் தேதி வரை, 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட கோர்ட் உட்பட தாலுகா பகுதி கோர்ட்டுகளுக்கு இன்று (ஏப்.10) முதல் வரும் ஏப்.15 வரை, 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்.10) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை தினமாகும். ஏப்.11 கோர்ட்டுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்.12,13ம் தேதிகள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்) வழக்கமான அரசு விடுமுறை நாட்கள். ஏப்.14ம் தேதி சித்திரை வருடப்பிறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு விடுமுறை தினமாகும். ஏப்.15 அன்று சமயபுரம் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையாகும். 5 நாட்கள் தொடர் அரசு விடுமுறை வரும் நிலையில் இடையில் வரும் ஏப்.11ம் தேதி (வெள்ளிக் கிழமை) கோர்ட்டுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கோர்ட்டுகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: