சொத்து, குடிநீர், புதை வடிகால் கட்டணம் என ஏப். 30ம் தேதிக்குள் வரி செலுத்தினால் பயனாளிக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை

திருச்சி, ஏப். 9: மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்.30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத் தொகையை பெற்றிடுமாறும், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்கிட வேண்டும். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், புதைவடிகால் கட்டணம், தொழில்வரி மற்றும் வரியில்லா இனங்களின் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக மாநகாட்சி ஆணையர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், புதை வடிகால் சேவைக் கட்டணம், வரி மற்றும் வரியில்லா இனங்கள் சம்பந்தமான அனைத்து வரி தொகைகளையும் ஆன்லைன் மூலம் https://tnurbanepay.tn.gov.in மற்றும் கூகுள் பே, பே டிம், போன் பே ஆகிய செயலியை பயன்படுத்தி தமிழ்நாடு அர்பன் இசேவை முனிசிபல் டேக்ஸ் (Tamil Nadu Urban eSevai Municipal Tax) எளிய முறையில் வரிகளை செலுத்திட பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும், திருச்சி மாநகராட்சி, அனைத்து வார்டுகுழு அலுவலகங்களில் அமைந்துள்ள வரி வசூல் மையங்களிலும் நேரிலும் வரிகளை செலுத்தலாம் எனவும், வரித்தொகைகளை உரிய காலத்திற்குள் செலுத்தி அபராதத்தை தவிர்த்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post சொத்து, குடிநீர், புதை வடிகால் கட்டணம் என ஏப். 30ம் தேதிக்குள் வரி செலுத்தினால் பயனாளிக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Related Stories: