வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சி, ஏப். 12: திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டம், மணப்பாறைவட்டம், அணியாப்பூர் கிராமம்,வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கிசுடும் இடத்தில், ஏப் 15ம் தேதி முதல் ஏப் 16ம் தேதிவரை காலை 7.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையும், மாலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரையும் ரெக்ரூயிட்ஸ் ட்ரெயினிங் சென்டர் சிஆர்பிஎப் (மத்தியஅதிரடிப்படை) பயிற்சியாளர்களால் துப்பாக்கிசுடும் பயிற்சி நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனிதநடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், பயிற்சிதளத்திற்குள் எவரும் பிரவேசிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: