அசைந்தாடி செல்ல காத்திருக்கும் தேர் வசூல் பணத்துடன் சென்ற கணக்காளரிடம் வழிபறியில் ஈடுபட்ட மூவர் கைது

திருச்சி, ஏப்.11: திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி பாலக்கரை உடையன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (65). இவர் லாரி செட் ஒன்றில் கணக்காளராக உள்ளார். கடந்த ஏப்.4ம் தேதி வேலையை முடித்துக்கொண்டு, வசூல் பணம் ரூ.6 ஆயிரத்துடன், காந்தி மார்க்கெட் சப்-ஜெயில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மூன்று பேரில் ஒருவன், அவர் வாயை பின்னால் இருந்து பொத்திக்கொள்ள, மற்ற இருவரும் விஸ்வநாதன் சட்டை பையில் இருந்து ரூ.6 ஆயிரம் வசூல் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்த தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி கேமரா பதிவுகள், கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வரைலானது.

இந்நிலையில் சம்பவம் குறித்து விஸ்வநாதன் நேற்று முன்தினம் (ஏப்.9) காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லுாரை சேர்ந்த தர்மதுரை (20), கீழரண்சாலை சத்திரமூர்த்தி நகரை சேர்ந்த அண்ணாமலை (21) என்பதும், மற்றொருவர் இவர்களின் கூட்டாளியான 17 வயது சிறுவனாவார். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் தர்மதுரை மற்றும் அண்ணாமலையை சிறையிலும், 17 வயது சிறுவனை அரசு கூர்நோக்கு பள்ளியிலும் அடைத்தனர்.

The post அசைந்தாடி செல்ல காத்திருக்கும் தேர் வசூல் பணத்துடன் சென்ற கணக்காளரிடம் வழிபறியில் ஈடுபட்ட மூவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: