திருச்சி பி.எப் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஏப். 9: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சந்தாதாரர் மற்றும் 1995ல் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் குறைபாடுகளை எளியமுறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்து வைக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ, தொ.மு.ச, ஏ.ஐ.டி.யூ.சி, ஐ.என்.டி.யூ.சி, எச்.எம்.எஸ், ஏ.ஐ.சி. சி.டி.யூ, எல்.எல்.எப், யூ.டி.யூ.சி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று பி.எப். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர்கள் சி ஐ டி யு ரெங்கராஜன், ஏ ஐ டி யூசி சுரேஷ், ஐ என் டி யூ சி வெங்கட் நாராயணன், எச்எம்எஸ் ஜான்சன், ஏ ஐ சி சி டி யு ஞான தேசிகன், எல் எல் எப் தெய்வீகன், யூ டி யூ சி சிவசெல்வம், தொ.மு.ச. மாநில செயலாளர் எத்திராஜ், சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர்.

இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் பிஎப் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

The post திருச்சி பி.எப் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: