திருச்சி, ஏப்.4: திருச்சி, தாயுமான சுவாமி கோயில் பங்குனி தெப்பத்திருவிழாவில் நேற்று சுவாமி கற்பக விருட்சத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.
திருச்சி மலைக்கோட்டை மட்டுவார்குழலம்மை, தாயுமான சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு தெப்பத்திருவிழா ஏப்.2ம் ேததி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2ம் திருநாளான நேற்று சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி திருவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதில் திராளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏப்.10ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது, தெப்பத்திருவிழாவை முன்னிட்டு காலை விசேஷ அபிஷேகம், மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் புறப்பட்டு பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்பம் கண்டருளல், இரவு 7 மணிக்கு குளத்தில் 5 முறை உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் லட்சுமணன், அறங்காவலர் குழுத்தலைவர் சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
The post மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் திருவிழா: கற்பக விருட்சம், காமதேனு வாகனத்தில் சுவாமிகள் வீதியுலா appeared first on Dinakaran.