வேலூர், மார்ச் 29: காட்பாடி வழியாக கர்நாடகத்துக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் கைப்பற்றினர். காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் ேபாலீசார் நேற்று மாலை காட்பாடி ரயில் நிலைய நடைமேடை எண் 1ல் வந்து நின்ற சென்னை-பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பயணிகள் பெட்டியில் சோதனையிட்ட போது, அங்குள்ள கழிவறை இடைவெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலா 25 கிலோ கொண்ட 8 சிப்பங்கள் அரிசி ரேஷன் அரிசி இருந்ததை கைப்பற்றினர். இதனை யாரோ கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச் செல்ல வைத்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி சிப்பங்களை காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் திவ்யாவிடம் ஒப்படைத்தனர்.
The post 200 கிலோ கடத்தல் அரிசி பறிமுதல் காட்பாடி ரயிலில் appeared first on Dinakaran.