வேலூர், மார்ச் 26: பிளஸ்2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாள் தேர்வில் 264 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழ்நாட்டில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கி நேற்று 25ம்தேதி வரை நடந்தது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் 80 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடைசி நாள் தேர்வை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன் ஆகிய பாடங்களுக்கு நடந்தது. நேற்று நடந்த இயற்பியல், பொருளாதாரம், ேவலை வாய்ப்பு திறன் தொடர்பான தேர்வுகள் நடந்தது. இதற்காக 15,937 மாணவர்கள் மற்றும் 191 தனித்தேர்வர்கள் என மொத்தம் 16,128 பேர் விண்ணப்பித்தனர். இதில் 15,864 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 264 பேர் தேர்வுக்கு வரவில்லை. கடைசி நாள் தேர்வு முடிவடைந்த நிலையில் தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்த மாணவ, மாணவிகள் துள்ளி குதித்து, ‘அப்பாடா’ தேர்வு தொல்லை முடிந்தது என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
The post பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்தது கடைசி நாள் தேர்வில் 264 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.