11 தாசில்தார் பணியிட மாற்றம் கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், மார்ச் 26: வேலூர் மாவட்டத்தில் 11 தாசில்தார் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்விவரம்: பேரணாம்பட்டு தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், பதவி உயர்வு பெற்று, இலங்கை தமிழர் மற்றும் மறுவாழ்வு பிரிவு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய சுஜாதா, கலால் மேற்பார்வையாளராகவும், அங்கு பணியாற்றிய ரமேஷ், மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், அங்கு பணியாற்றிய முருகன், வேலூர் தாலுகா தனி தாசில்தாராகவும் (குடிமைபொருள்), அங்கு பணியாற்றிய நெடுமாறன், வேலூர் கோட்ட கலால் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பேரிடர் மேலாண்மை தனிதாசில்தாராக பணியாற்றிய ரமேஷ், குடியாத்தம் ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய நெடுமாறன், கலெக்டர் அலுவலக எப் பிரிவு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய சச்சுதானந்தன், கலெக்டர் அலுவலக மேலாளர்(நீதியியல்), அங்கு பணியாற்றிய பூமா, நெடுஞ்சாலை திட்டங்கள் (அலகு-3) தனி தாசில்தார்(நில எடுப்பு) பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காட்பாடி தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சுகுமாரன், பதவி உயர்வு பெற்று, வேலூர் பறக்கும் படை தாசில்தாராகவும், கே.வி.குப்பம் தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பிரியா, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மற்றும் மேலாண்மை பிரிவு தனிதாசில்தாராக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

The post 11 தாசில்தார் பணியிட மாற்றம் கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: