சுமை தூக்கும் தொழிலாளிக்கு கத்திக்குத்து சிறுவன் சிக்கினான், 2பேருக்கு வலை காட்பாடி ரயில் நிலையத்தில்

வேலூர், மார்ச் 28: காட்பாடி ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்திய வழக்கில் சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தேவா(30). இவர் காட்பாடி ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழில் செய்து வருகிறார். 25ம் தேதி நள்ளிரவு இவரும், காட்பாடியைச் சேர்ந்த பீட்டா மற்றும் சென்னை, வேலூரை சேர்ந்த 2 சிறுவர்கள் என்று 4 பேரும் அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பீட்டா மற்றும் 2 சிறுவர்களும் தேவாவை கல்லால் சரமாரி தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் பீட்டா உள்ளிட்ட 3 பேரும் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடம் வந்து படுகாயம் அடைந்த தேவாவை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஒரு சிறுவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான பீட்டா மற்றும் மற்றொரு சிறுவனை தேடிவருகின்றனர்.

The post சுமை தூக்கும் தொழிலாளிக்கு கத்திக்குத்து சிறுவன் சிக்கினான், 2பேருக்கு வலை காட்பாடி ரயில் நிலையத்தில் appeared first on Dinakaran.

Related Stories: