வேலூர், மார்ச் 30: வேலூர் மாவட்டத்தில் 3 வருவாய் ஆய்வர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, அணைக்கட்டு தாசில்தார் அலுவலகம் இளநிலை வருவாய் ஆய்வாளர் எஸ்.அரசகுமார், கலெக்டர் அலுவலகம் எச்.1 இருக்கை இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார். வேலூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகம் இளநிலை வருவாய் ஆய்வாளர் ராஜன்பாபு, கலெக்டர் அலுவலகம் எப்.8 இருக்கை இளநிலை வருவாய் ஆய்வாளராகவும், இங்கு பணியில் இருக்கும் முத்துலட்சுமி, காட்பாடி தாசில்தார் அலுவலகம் இளநிலை வருவாய் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
The post வருவாய் ஆய்வர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.