தண்டராம்பட்டு, மார்ச் 27: தண்டராம்பட்டு அடுத்த கிழ்பாச்சார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன்(52) என்பவர், தனக்கு உரிய 50 சென்ட் இடத்தை அருகில் உள்ளவர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகிறார். எனவே எனக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து காட்ட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கின் அடிப்படையில் இடத்தை அளந்து காட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நேற்று தண்டராம்பட்டு மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் சர்வேயர் பிரகாஷ் இறையன்பு, வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், எஸ்ஐ ஆகாஷ் தலைமையில் அளவீடு செய்து கல் நட்டு காட்டப்பட்டது.
The post ஆக்கிரமிப்பு புகாரில் நிலம் அளவீடு appeared first on Dinakaran.