வந்தவாசி, மார்ச் 26: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து ரேஷன் கடை மீது விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி எதிரே சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் இருந்தது. ஆலமரத்தின் நடுப்பகுதியில் உறுதித் தன்மை இழந்த நிலையில் இருந்ததால் நேற்று திடீரென பள்ளி அருகே உள்ள புதிதாக ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை மீது சாய்ந்தது. இதில் ரேஷன் கடையின் கட்டிடம் சேதமானது. கடை திறப்பு விழா செய்வதற்கு முன்பாகவே மரம் விழுந்ததால் கட்டிடம் சேதம் ஏற்பட்டுள்ளன. உணவு இடைவேளைக்குப் பிறகு மரம் சாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் யாரும் வெளியே நடமடாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தினர் விரைந்து வந்து அங்கிருந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.
The post ஆலமரம் வேரோடு சாய்ந்து ரேஷன் கடை மீது விழுந்தது வந்தவாசி அருகே பரபரப்பு 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த appeared first on Dinakaran.