ஏலச்சீட்டு நடத்துபவரின் வீட்டில் நகை, பணம் திருட்டு 5 பேர் மீது புகார் செய்யாறு அருகே ஏலச்சீட்டு நடத்துபவரின் வீட்டில்

செய்யாறு, மார்ச் 28: செய்யாறு அருகே ஏலச்சீட்டு நடத்துபவரின் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்றதாக 5 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இருமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(40), சிமெண்ட் ஜாலி ஒர்க்ஸ் கடை வைத்துள்ளார். மேலும் மாத ஏலச்சீட்டும் நடத்தி வருகிறார். செய்யாறு அடுத்த கிளியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன், செல்வம், வெங்கடேசன், பல்லி கிராமத்தை சேர்ந்தவர் மணி, வடங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் ஆகியோர் ஆனந்த் நடத்தும் ஏலச் சீட்டில் உள்ளனர்.

இந்நிலையில் ஆனந்தனுக்கும், சரவணன் உள்ளிட்ட 5 பேருக்கும் ஏலச்சீட்டு பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 22ம்தேதி ஆனந்தன் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ளார். தரிசனம் முடிந்து மறுநாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 சவரன் நகை, ரொக்கம் ரூ.27 ஆயிரம், வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த பைக் ஆகியவை திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆனந்தன் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அப்புகாரில், எனது வீட்டின் பூட்டை உடைத்து சரவணன் உள்ளிட்ட 5 பேரும் நகை, பணத்தை திருடிச்சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

The post ஏலச்சீட்டு நடத்துபவரின் வீட்டில் நகை, பணம் திருட்டு 5 பேர் மீது புகார் செய்யாறு அருகே ஏலச்சீட்டு நடத்துபவரின் வீட்டில் appeared first on Dinakaran.

Related Stories: