செங்கம், மார்ச் 28: செங்கம் டவுன் ஜங்ஷன் சாலை மூன்று வழி சந்திப்பு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எஸ்எஸ் தடுப்பு அமைப்பதற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கு உண்டான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் செங்கம் முதல் குப்பநத்தம் சாலை செங்கம் முதல் போளூர் சாலை செங்கம் புறநகர் பகுதி என ஜங்ஷன் சாலை முழுவதும் எஸ் எஸ் தடுப்பு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவது.
அதேபோல ரவுண்டானா பகுதியிலும் எஸ்எஸ் தடுப்பு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பணிகள் முழுமை பெற்றவுடன் விரைவில் இப்பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் உருவ சிலை திறப்பு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post மூன்று வழி சந்திப்பு பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம் செங்கம் டவுன் ஜங்ஷன் சாலையில் appeared first on Dinakaran.