கலசபாக்கம், மார்ச் 24:கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட வீரலூர் கிராமத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நேற்று சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கஞ்சி குடித்தனர். இதில் சி.என்.அண்ணாதுரை எம்பி பேசியதாவது: முதல்முறையாக கலசப்பாக்கம் தொகுதியில் மசூதிகள், தேவாலயங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 9 பள்ளிவாசல்கள் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் சுற்று சுவர், சுகாதாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டன. கலைஞர் முதல்வராக இருந்தபோது திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் சிறுபான்மையினர்களின் நலன் கருதி மசூதிகள், தேவாலயங்கள் சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அமைச்சர் எ.வ.வேலு முயற்சியால் தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் கலசபாக்கம் தொகுதியில் சிறுபான்மையர்களின் நலன் கருதி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவகுமார், பொதுக்குழு உறுப்பினர் அன்பரசி ராஜசேகரன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி முருகையன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post இப்தார் நோன்பு நிகழ்ச்சி 9 பள்ளிவாசல்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.