உதிரிபாக தொழிற்சாலையில் பயங்கர தீ ரூ.பல கோடி பொருட்கள் சேதம் செய்யாறு சிப்காட்டில் அதிகாலையில் பரபரப்பு

செய்யாறு, மார்ச் 30: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்டில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் அழிஞ்சல்பட்டு கிராம பகுதியில் உள்ள தனியார் கார், பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கு தேவையான கீர் பாக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் மின்கசிவு காரணமாக கெமிக்கல் சேமிப்பு அறையில் திடீர் விபத்து ஏற்பட்டது. கெமிக்கல் என்பதால் வெடிசத்தத்துடன் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதபோல் வந்தவாசி, காஞ்சிபுரம் மற்றும் சிப்காட்டில் உள்ள தனியார் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் ரூ.பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. அதே நேரத்தில் அந்த அறையில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தூசி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உதிரிபாக தொழிற்சாலையில் பயங்கர தீ ரூ.பல கோடி பொருட்கள் சேதம் செய்யாறு சிப்காட்டில் அதிகாலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: