சாய்பல்லவியை ஒருதலையாய் காதலிக்கும் பாலிவுட் நடிகர்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் குல்சன் தேவய்யா. தம் மாரோ தம், ஹேட் ஸ்டோரி, ஹண்டா, கபாரெட், கோஸ்ட் ஸ்ேடாரீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை சாய்பல்லவியை ஒரு தலையாக காதலித்து வருவதை மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு சாய் பல்லவி மீது சில காலமாகவே ஈர்ப்பு (க்ரஷ்) இருக்கிறது. என்னிடம் அவரின் செல்போன் நம்பர் இருக்கிறது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள துணிச்சல் இல்லை. அவர் ஒரு அருமையான டான்ஸர், நடிகை. இது வெறும் கிரஷ் தான். அதை தாண்டி வேறு எதுவும் இல்லை.

அவர் சிறந்த நடிகை. எப்பொழுதாவது அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அது போதும் எனக்கு. மற்றது பற்றி தெரியவில்லை. மற்றவை நடக்காவிட்டால் என்ன செய்வது. ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று இருந்தால் அது நடக்கும், இல்லை என்றால் அது நடக்காது. ஒரு சிறந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நல்லது. அதில் தவறு எதுவும் இல்லையே. சாய் பல்லவி பட வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக அதை ஏற்பது குறித்து யோசிப்பேன்.

ஸ்க்ரிப்ட்டை பார்த்துவிட்டு அதன் பிறகே அந்த படத்தில் நடிப்பதா, வேண்டாமா என முடிவு செய்வேன். சாய்பல்லவி படம் என்றால் எந்த கேள்வியும் கேட்காமல் நடிப்பேன். காரணம் அவரே சிறந்த கதை தேர்வாளர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சாய் பல்லவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். பெங்களூரை சேர்ந்த குல்ஷன் தேவையா 2012ம் ஆண்டு நடிகை கல்லிரோய் தசியாஃப்டாவை திருமணம் செய்து கடந்த ஆண்டு விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சாய்பல்லவியை ஒருதலையாய் காதலிக்கும் பாலிவுட் நடிகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: