சேலம்: கோவை-சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், வீரபாண்டி-சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி வந்தபோது, ரயில் மீது கற்கள் வந்து விழுந்தது. இதில், சி-1 பெட்டியின் வலதுபுற அவசர கால சைடு கண்ணாடி பலத்த சேதமடைந்தது. இதுபற்றி சேலம் ஆர்பிஎப் போலீசார் ரயில்வே பாதுகாப்பு சட்டம் 153ன் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கல் எறிந்தது அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் எனத்தெரியவந்தது. சம்பவத்தில் தொடர்புடைய 9, 10, 11ம் வகுப்பு படிக்கும் 13 முதல் 16 வயதுடைய 8 சிறுவர்களை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் பிணையில் விடுவித்தனர்.
