சென்னை: ெசன்னை சிந்தாதிரிப்பேட்டை கோவிந்தன் தெருவை சேர்ந்தவர் குல்சார் (45). இவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கிளினிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (25) என்பவரின் மனைவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஜித்குமார் குல்சார் மகன் மீது ேகாபமாக இருந்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 12ம் தேதி குல்சார் இரவு பணிக்கு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது தாய் மட்டும் இருந்தார். அப்போது அஜித் குமார் வீட்டிற்கு வந்து குல்சார் தாயாரிடம் உனது பேரன் எங்கே? எனது மனைவியிடம் ஏன் பேசுகிறான் என்று கேட்டு ஆபாசமாக பேசியுள்ளார். பிறகு வீட்டின் ஜன்னல் கண்ணாடியை கையால் உடைத்துள்ளார். இதில் குல்சார் தாயின் மீது உடைந்த கண்ணாடி துண்டுகள் விழுந்து காயம் ஏற்பட்டது. மேலும் அஜித்குமார் உனது பேரனை நான் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால் அச்சமடைந்த குல்சார் சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் அஜித்குமாரை கைது ெசய்தனர்.
