மைனர் பெண்ணிடம் சில்மிஷம் 2 பெண்டாட்டிக்காரர் கைது

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பறையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன்(34), கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இருவருக்கும் தலா 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஹரிஹரன் வீட்டின் அருகே மது போதையில் சுற்றிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக நடந்து சென்ற 17 வயது மைனர் பெண்ணிடம் திடீரென பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறியடித்து ஓடிச்சென்று தாயிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதுகுறித்து மைனர் பெண்ணின் தாய் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஹரிஹரனை நேற்று கைது செய்தனர்.

Related Stories: