பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய தவெக பொறுப்பாளர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் காலிதா வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஓமலூர் நகரப் பொறுப்பாளர் மணிகண்டன் என்பவர், சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை திட்டமிட்டு ஏமாற்றி, ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டு கைதாகியிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் அளிக்கிறது.

குற்றவாளி மணிகண்டன் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யாமல், உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொபைல் அரசியல் கட்சியினர் என்ற போர்வையில் உலா வரும் இதுபோன்ற சமூக விரோதிகளை எந்தவொரு இயக்கமும் ஆதரிக்கக் கூடாது. பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர குற்றங்களைத் தடுத்திட அரசு மிக தீவிரமான சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: