திருவேங்கடம்: சங்கரன்கோவில் அருகே 10ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கார் டிரைவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைதுசெய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, கடந்த வாரம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் வீடு திரும்பிய சிறுமியிடம் பெற்றோர் விசாரணை நடத்தினர்.
இதில் குருவிகுளம் அருகே மலையடிப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த கார் டிரைவரான மாரியப்பன் மகன் காளிராஜ் (22), சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. புகாரின்பேரில் குருவிகுளம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து காளிராஜை கைது செய்தனர். பின்னர் அவரை சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
