மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

சென்னை: மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மயிலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையில் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்பொழுது கூட்டேரிப்பட்டு பிடிஓ அலுவலகம் முன்பு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்து சோதனை செய்ததில், அவர் சென்னை, சவுகார்பேட்டை, பெருமாள் கோயில் கார்டன் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜசேகர் (36) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் சோதனை செய்ததில் சுமார் 16 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுவரையில் இப்பகுதியில் இந்த அளவுக்கு கஞ்சா புழக்கம் இல்லாததால், இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மயிலம் போலீசார் உடனடியாக அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், ரயில் மூலம் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்து திண்டிவனம், மயிலம் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வது தெரியவந்தது. குறிப்பாக மயிலம் அருகே அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வது தெரிய வந்துள்ளது.

Related Stories: