திருப்பூர்: தவெக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து விட்டது என வானதி சீனிவாசன் கூறினார். திருப்பூரில் பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு செய்யும் தவறுகளையும், நிர்வாகத் திறமையின்மையையும் எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கான நீதியை விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசு பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சிங்கப்பெண் படையில் சீருடையையோ, பெயரையோ மாற்றுவதால் மாற்றம் வந்துவிடாது. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
