பங்குனி திருவிழா ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் தெப்பத்திருவிழா

தரங்கம்பாடி, ஏப்.12: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பக்கம் உள்ள ஒழுகைமங்கலத்தில் ஸ்ரீசீதளாபரமேஸ்வரி என்னும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி திருவிழாவில் தெப்பதிருவிழா நேற்று நடைபெற்றது. ஒழுகைமங்கலத்தில் உள்ள ஸ்ரீசீதளா பரமேஸ்வரி என்னும் மாரியம்மன் கோயில் உள்ளது. இது பிரார்த்தனை தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்தமாதம் 29ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த ஞாயிற்றுகிழமை (5ம் தேதி) நடந்தது. அதைத்தொடர்ந்து தெப்பத் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தெப்பத்தில் மாரியம்மன் அலங்கார தோற்றத்தில் காட்சியளித்தார். தெப்பம் 3 முறை திருக்குளத்தை வலம் வந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 

Related Stories: