மதுபாட்டில்கள் பறிமுதல்

போடி, ஏப். 14: போடி தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் கண்காணித்த போது, மீனாட்சிபுரம் கன்னிமார் கோயில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (34) என்பவர் சட்ட விரோதமாக அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை சோதனைசெய்த போது சுமார் 15 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போடி தாலுகா போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: