கலெக்டர் தொடங்கி வைத்தார் வாக்கு சதவீதம் குறைந்த பகுதிகளில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி எல்இடி திரை வாகனம் மூலம் விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம், ஏப்.14: அரியலூர் மாவட்டம் பெரியவளையம் ஊராட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் 2026, அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் முந்தைய சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு சதவீதம் குறைந்த பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி எல்இடி திரை வாகனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 40 சதவீதத்துக்கும் மேல் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்துவது தொடர்பான விவரங்களையும் மாவட்டத்திற்குட்பட்ட முதல் நிலை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இந்த எல்இடி திரை வாகனங்களில் குறும்படங்கள் ஒளிபரப்பபட்டது.

இதில் அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம், தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா, சி விஜில் செயலியில் தேர்தல் விதிமீறல் குறித்த புகார் செய்வது தொடர்பான விளக்கம், எனது வாக்கு, எனது இந்தியா, வாக்குச்சாவடி அமைவிடம், வாக்காளர் பட்டியலில் பெயர் விவரம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாக தெரிந்து கொள்வது, வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல நமது ஜனநாயக உரிமை போன்ற குறும்படங்கள் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒளிபரப்பப்பட்டன. இந்த விழிப்புணர்வு குறும்படங்களை ஏராளமானோர் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்.

Related Stories: