வேட்பாளர்கள் முன்னிலையில் நடந்தது சீர்காழியில் முதியோரிடம் தபால் வாக்குபெற அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

சீர்காழி, ஏப்.14: சீர்காழியில் வாக்குச்சாவடிகளில் நேரடியாக சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஆர்டிஓ தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளில் நேரடியாக சென்று வாக்களிக்க இயலாத 85 வயது நிறைந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 737 நபர்களின் இல்லத்திலேயே சென்று நேரடியாக அஞ்சல் வாக்குபெறும் பணியினை சீர்காழி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தொடங்கி தொடங்கி வைத்தார்.

இரண்டாவது நாளான நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. சீர்காழி சட்டமன்றத் தொகுதி, அஞ்சல் வாக்கு பெறும் பணிக்காக 15 குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவில் மண்டல அலுவலர் தலைமையில் மைக்ரோ அப்சர்வர், தலைமை ஆசிரியர், காவலர், கேமராமேன், உதவியாளர்கள் ஈடுபட உள்ளனர். சீர்காழி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜரத்தினம், வட்டாட்சியர்கள் சண்முகம், பிரான்ஸ்வா, துணை வட்டாட்சியர்கள் பாபு, சரவணன், ரகு,கணேசன் வருவாய் ஆய்வாளர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: