போடி, ஏப். 14: போடி அருகே மீனாட்சிபுரம் விநாயகர் கோயில் தெருவில் குடியிருப்பவர் ஆட்டோ டிரைவர் பிரபாகரன் (44). இவர் உள்ளூரை சேர்ந்த கனிராஜ், அவர் மனைவி பூங்கொடி, மகள் தேவிகா ஆகியோரை கடந்த பிப்.5ம் தேதி தேனி பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு வந்தார். இதனையடுத்து மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சுரேந்தர், பாபு சிட்டி பாபு, லிங்கேஷ், சந்துரு, விக்னேஷ், கிஷோர், வினோத் ஆகியோர் ஆட்டோ டிரைவர் பிரபாகரன் வீட்டிற்கு சென்று, கனிராஜ் குடும்பத்தை எங்கு இறக்கி விட்டாய் என கேட்டு கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர், அங்கிருந்து 7 பேரும் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த பிரபாகரன் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஆட்டோ டிரைவர் பிரபாகரன் புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
