கரூர் மாவட்டத்தில் மூத்தவாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு செய்தனர்

கரூர், ஏப். 14: கரூர் மாவட்டத்தில் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 3143 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்துகின்றனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரவிகுமார் கூறுகையில். கரூர் மாவட்டத்தில் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 2087 நபர்கள் மற்றும் 1056 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 3,143 பேர் தபால் மூலம் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வாக்குப் பதிவு நாளான வரும் 23ம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களிக்க இயலாது என்பதை கருத்தில் கொண்டு, இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களில் படிவம் 12-D வாயிலாக விருப்பம் தெரிவித்தவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறும் பணி 13.4.2026 மற்றும் 14.4.2026 ஆகிய இரண்டு தினங்களிலும் நடைபெற்றது. இதில் விடுபட்டவர்களுக்கு 18.4.2026 காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குச்சாவடி அலுவலர் குழு மூலமாக வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளதாக கலெக்டர் ரவிகுமார் தெரிவித்தார்.

Related Stories: