வனப்பகுதியில் பதுக்கிய 432 மதுபாட்டில்கள் பறிமுதல்

சிங்கம்புணரி, ஏப்.14: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தேனம்மாள்பட்டி வனப்பகுதியில் மது பாட்டில்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எஸ்.வி. மங்கலம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது, வனப்பகுதியில் 432 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வனப்பகுதியில் மது பாட்டில்களை கொண்டு சென்று பதுக்கி வைத்தது யார்? கூடுதல் விலையில் விற்பனை செய்ய கொண்டு வந்ததா அல்லது தேர்தல் நேரத்தில் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.வி.மங்கலம் பகுதியில் போலி மதுபான ஆலை இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்கள் போலி மதுபானமா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: