இன்றும் நடக்கிறது குளித்தலை பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கோலங்களை வரைந்து விழிப்புணர்வு

குளித்தலை, ஏப். 14: கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் குளித்தலை நகராட்சி ஆணையர் சுதர்சன் தலைமை வகித்தார். சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் மகேந்திரன், தலைமை இடத்து துணை தாசில்தார் ஜெயவேல் முன்னிலை வகித்தனர். பேருந்து நிலையத்தில் உள்ள பயணியர் நிழற்குடை முன்பு மகளிர் திட்ட சுய உதவி குழு பெண்களால் தேர்தல் தொடர்பான கோலங்கள் வரையப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 23 இல் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பேருந்துகளில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை அதிகாரிகள் வழங்கினர்.இதில் சுய உதவி குழு பெண்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: