நாகையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம்நிலை ஒதுக்கீடு

நாகப்பட்டினம், ஏப்.14: நாகப்பட்டினத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் நிலை ஒதுக்கீடு பணி அரசியல் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் நிலை சீரற்றமயமாக்கல் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் பார்வையாளர் (பொது) பர்வேஸ் அஹமது சித்திக் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஆகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். அனைத்துக்கட்சிகளின் வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

நாகப்பட்டினம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 288 Ballot Unit , 288 Control Unit, 312 VVPAT, கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 264 Ballot Unit , 264 Control Unit, 286 விவிேபட் , வேதாரண்யம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 288 பேலட் யூனிட் , 288 Control Unit, 312 விவிபேட் இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்குட்டபட்ட வாக்குச்சாவடிகளுக்கு பிரிக்கும் இரண்டாம் நிலை சீரற்றமயமாக்கல் நடந்தது. பின்னர் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெறும். அதன்பிறகு இந்த இயந்திரங்கள் வரும் 22ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகள் வாரியாக அனுப்பி வைக்கப்படும்.

Related Stories: