பெரம்பலூர்,ஏப்.14: பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களின் செலவு கணக்குகளை ஆய்வு செய்யும் பணி வருகிற 17 மற்றும் 21 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகளை ஆய்வு செய்யும் பணி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக இரண்டாவது தள கூட்ட அறையில் முதற்கட்ட ஆய்வு நேற்று முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட ஆய்வு வருகிற 17ஆம் தேதியும், மூன்றாம் கட்ட ஆய்வு வருகிற 21ஆம் தேதியும் தேர்தல் செலவினப் பார்வையாளர் முன்னிலையில் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டங்களில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் செலவின முகவர்கள் உரிய அடையாள அட்டை, பதிவேடு, வங்கி கணக்கு அறிக்கை, மற்றும் ரசீதுகளுடன் தவறாது வேட்பாளர்களின் செலவின அறிக்கையை தாக்கல் செய்து சரிப்பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
