இரட்டை இலைக்கு ஓட்டு போட்றாதீங்க: அதிமுக வேட்பாளர் ‘அன்பு வேண்டுகோள்’

மதுரை மாவட்டம், சோழவந்தான் (தனி) தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவான மாணிக்கம், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன்படி நேற்று முன்தினம் இரவு மேலநாச்சிகுளம், கரட்டுப்பட்டி, நாச்சிகுளம், நரிமேடு, ரிஷபம், திருமால்நத்தம், ராயபுரம், நெடுங்குளம் ஆகிய கிராம பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அதிமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் அவர் எம்எல்ஏவாக இருந்தபோது, மேற்கொண்ட நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்குங்கள் என்று பேசினார். இந்நிலையில் கரட்டுப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தபோது, ‘‘தாயி… மறந்துடாதீங்க.. 23ம் தேதி இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டுறாதீங்க’’ என்று உளறினார். பின்னர் ஒருவழியாக சமாளித்து, ‘‘இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’’ என்றார். இதைக் கண்ட நிர்வாகிகள், ‘‘திண்டுக்கல் சீனிவாசன்தான் அவ்வப்போது உளறுவார். ஆனால், சோழவந்தான் வேட்பாளரும் இப்படி ஆயிட்டாரே’’ என புலம்பினர்.

Related Stories: