ஐந்தாண்டுகளில் வெற்றிகரமான தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பணிகளை இந்தியாவே பாராட்டுகிறது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் புகழாரம்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஐந்தாண்டு வெற்றிகரமான பணிகளை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே பாராட்டுகிறது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் புகழாரம் சூட்டினார். சென்னை அடுத்த மறைமலைநகரில் நடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியதாவது: நாங்களெல்லாம் முதல்வர் ஸ்டாலின் உடன் உறுதியாக கைகோர்த்திருக்கிறோம். முதல்வர் பணியை, ஐந்தாண்டுகளாக வெற்றிகரமான இந்த பணியை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது, இந்தியாவே பாராட்டுகிறது. இதை பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத பா.ஜ. பொறாமையின் உச்சத்தில் இருக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டை அழிப்பதற்கான படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கிறது. இது பலிக்காது. சில சதிகளை செய்து பார்க்கிறார்கள்.

முடியவில்லை. இன்னும் அந்த சதிகளை தொடர பார்க்கிறார்கள், நாங்கள் உறுதியாகவும், வலிமையாகவும் இருக்கிறோம், ஸ்டாலின் கரத்தை வலுபடுத்துவோம். நாங்கள் ஒரு ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில், பெருவாரியான வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஆவார் என்று அந்த ஆய்வு சொல்கிறது. நேற்று முன்தி னம் ஒரு செய்தியைப் பார்த்திருப்பீர்கள், ஒருவர் சொல்கிறார், காங்கிரஸ் என்னோடு இருக்கிறது என்று. நான் சொல்கிறேன், தலைவர் ராகுல்காந்தி சார்பாகவும், தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சார்பாகவும் காங்கிரஸ் பேரியக்கம் மு.க.ஸ்டாலினுடன் மட்டும்தான் இருக்கிறது.

இந்த செய்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் வலியுறுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. அரசியல் என்பது அரசியல் களம் என்பது ஒரு விவசாயம் போன்றது, முதலில் நிலத்தை சரிசெய்ய வேண்டும். நிலத்தை பதப்படுத்தி நாற்று நட வேண்டும், களை எடுக்க வேண்டும். அறுவடை காலத்தில் அறுவடை செய்ய வேண்டும், அதுதான் உண்மையான அரசியல். இப்படிதான் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரசும் 40-50 ஆண்டுகளுக்கு மேல் பின்னிப்பிணைந்த உறவாக இருக்கிறது. ஆகவே, நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் இந்த உறவை பிரிப்பதற்கு முயற்சி செய்வதும், சதி செய்வதும் எந்த காலத்திலும் முடியாது, நாங்கள் சதிகளை முறியடிப்போம். உறுதியாக பெருவாரிரயான வித்தியாசத்தில் முதல் வராக மு.க.ஸ்டாலின் வருவார். இது வெற்றி கூட்டணி, இதை யாரும் அசைக்க முடியாது என்றார்.

Related Stories: