10 வருஷமா தட்டுறேன்… ஒருநாள் கண்டிப்பா திறக்கும்: காத்திருக்கும் சீமான்

குமரி மாவட்டத்தில் நாதக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: இங்க பாருங்க.. மதங்கிறது நீங்க விரும்புனா ஏத்துக்கலாம், பிடிக்கலைன்னா விட்றலாம். ஆனா இனம் அப்படி கிடையாது. மதங்கிறது மேல போடுற சட்டை மாதிரி, ஆனா இனம்ங்கிறது நம்ம உடம்புல ஓடுற ரத்தம். அடிச்சவன்தான்டா மத்தவனுக்கு கத்துக்கொடுக்கணும்.. கத்துக்கிட்டவன் தான்டா மத்தவனுக்கு வழிகாட்டணும்! நாம இன்னைக்கு அடிபட்டு நிக்கிறோம்.

நமக்கு வழிகாட்ட ஒரு தலைவன் வேணும். அந்தத் தலைவன் நம்ம இனத்துல இருந்துதான் வரணும். இயேசு கிறிஸ்துவை எடுத்துக்குங்க.. அவர் யாரு? ஒரு தச்சரோட மகன். என் அப்பன் தச்சன் வேலை செஞ்சப்போ, அவரோட சேர்ந்து கலப்பை செஞ்சு கொடுத்தவர் என் இயேசு. அவர் ஒரு உழைப்பாளி, அவர் என் இனத்தைச் சேர்ந்தவர். ‘கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’னு அவர் சொன்னார். நான் பத்து வருஷமா தட்டிக்கிட்டே இருக்கேன். கதவு ஒருநாள் கண்டிப்பா திறக்கும். அன்னைக்கு இந்தத் தமிழினம் நிமிர்ந்து நிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: