சிவகங்கை மாவட்டத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் இன்று காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் அருகே உள்ள பகுதியில் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதற்காக தவெக மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான பிரபு தெருமுனை பிரசாரத்துக்கு அனுமதி கேட்டும், உத்தேசமாக 500 பேர் கூடுவார்கள் என்றும் விண்ணப்பித்துள்ளார். அதில் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்கவில்லை.
4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ள நிலையில், 500 பேர் மட்டுமே வருவார்கள் என கேட்டுள்ளது போலீசாரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள பகுதியில் மரங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் ரசிகர்கள், தொண்டர்கள் ஏறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தகர சீட் போட்டு மறைத்துள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம், வடலூரில் பிரசாரத்தை நேற்று முன்தினம் ரத்து செய்த நிலையில், நாளை அதே வடலூரில் குறிஞ்சிப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
