காஸ் தட்டுபாடு கேள்வி பியூஷ் கோயல் கோபம்

கோவை: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மெட்ரோ திட்டத்தை பொறுத்தவரை உரிய தகவல்களோடு மெட்ரோ திட்டத்தை திருத்தி அனுப்புமாறு ஒன்றிய அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திற்கும், டெல்லிக்குமான தேர்தல் எனும் கருத்து, நாட்டை இரண்டாக பிரித்துப் பார்க்கும் பார்வை. அந்த பார்வை எங்களுக்கு இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவே தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது. பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். காஸ் தட்டுப்பாடு, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு குறித்து தொடர்ந்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கோபம் அடைந்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளிக்காமல் எழுந்து சென்றார்.

Related Stories: