மயங்கி விழுந்த அ.தி.மு.க. வேட்பாளர்: ஓடோடி வந்த அமைச்சர், காங். எம்பி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக இளமதி சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். அவர் ஆடுதுறையில் தனது பிரசாரத்தை நிர்வாகிகளோடு நேற்று காலை தொடங்கினார். தொடர்ந்து மதியம் வண்ணக்குடி ஊராட்சியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வெயில் கொளுத்தியதால் இளமதி சுப்பிரமணியன் உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை, நிர்வாகிகள் மீட்டு ஆடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த திருநீலக்குடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளரும், அமைச்சருமான கோவி.செழியன் பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதா, முன்னாள் எம்.பி.ராமலிங்கம் ஆகியோருடன் ஆடுதுறை தனியார் மருத்துவமனைக்கு சென்று, அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனிடம் உடல்நிலை குறித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் தான் நலமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: