குளித்தலை வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

குளித்தலை, பிப். 28: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார விவசாயிகளுக்கான ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி வேளாண்மை இயக்குனர் குமரன் தலைமை வகித்தார். அப்போது வேளாண்மை துறையில் இருக்கின்ற மானியத் திட்டங்கள், விதை இருப்பு, உரம் இருப்பு பற்றி விளக்கமாக கூறினார்.

மேலும் புலப்பதிவேடு, விவசாயிகளின் நில விபரங்கள், பயிர் விபரங்கள், டிஜிட்டல் மயமாக்கும், ஒருங்கிணைந்த தளம் இதன் முக்கியத்துவம் பற்றி கூறினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் மதி ஐஸ்வர்யா தோட்டக்கலை திட்டங்கள் பற்றி கூறினார் வேளாண்மை அலுவலர் கணேசன் உரங்கள் பயன்பாடு பற்றி விளக்கம் அளித்தார்.

வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் கல்யாணி துறை துறை சார்ந்த திட்டங்களை கூறினார். முடிவில் ஆத்மா திட்ட அலுவலர் செல்வேந்திரன் நன்றி கூறினார். இதில் உதவி திட்ட அலுவலர் பிரியதர்ஷன் செல்வராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான விவசாயிகள் குழு கூட்டத்திற்கான செய்திருந்தனர்.

 

Related Stories: